நிர்வாணம், பௌத்தம்
நிர்வாணம் (nirvāṇa;) (சமசுகிருதம்: निर्वाण,; பாளி: nibbāna) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துன்பங்களை "வெளியேற்றுவது" அல்லது "தணிப்பது" என்பதாகும்.[1] நிர்வாணம் என்பது ஈனயானம் மற்றும் தேரவாத பௌத்தப் பாதைகளின் இலக்காகும். மேலும் உலகத் துன்பங்கள் மற்றும் மறுபிறப்புகளில் சமூகவியல் விடுதலையைக் குறிக்கிறது.[2][2][3] நிர்வாணம் என்பது நான்கு உன்னத உண்மைகளில் "துக்க நிவிருத்தி" பற்றிய மூன்றாவது உண்மையின் ஒரு பகுதி,[2] மற்றும் "பௌத்தத்தின் உச்ச வரம்பு கொள்கையன உன்னதமான எண்வகை பாதையின் குறிக்கோள் ஆகும்."[3]
பௌத்த மரபில், நிர்வாணம் என்பது பொதுவாக மனதில் எழும் "மூன்று நெருப்புகள்",[4] எனும் "மூன்று விசயங்களான"[5][6] பேராசை (ராகம்), வெறுப்பு (துவேஷம்) மற்றும் அறியாமை (மோகம்) ஆகியவற்றை நீக்குதல் என விளக்கப்படுகிறது.[6] இந்த நெருப்புகள் அணைக்கப்படும் போது, மனிதன் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைகிறான்.
நிர்வாணம் குறித்து சில அறிஞர்களால் அனத்த (சுயமற்ற) மற்றும் சூன்யம் (வெறுமை) நிலைகளுடன் ஒத்ததாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது மற்ற அறிஞர்கள் மற்றும் பயிற்சி செய்யும் துறவிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.[web 1][7][8][9][10]காலப்போக்கில் புத்த சமயக் கோட்பாட்டின் வளர்ச்சியுடன், பிற தத்துவங்களான மனதின் செயல்பாடு இல்லாமை ஆக்குதல்,[11] ஆசையை நீக்குதல் போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேரவாத பௌத்தக் கல்வி மரபு இரண்டு வகையான நிர்வாணத்தை அடையாளம் காட்டுகிறது: சோபாதிஷேச-நிர்வாணம் உண்மையில் "மீதமுள்ள நிர்வாணம்" வாழ்க்கையில் அடைந்து பராமரிக்கப்படுகிறது. மேலும் பரிநிர்வாணம் அல்லது அனுபாதிஷேச-நிர்வாணம், அதாவது "எஞ்சியில்லாத நிர்வாணம்" அல்லது இறுதி நிர்வாணம், மரணத்தின் போது அடையப்படுகிறது. இது வழக்கமான முறையில் (பௌத்த நம்பிக்கைகளின்படி) மறுபிறப்பு அல்லது மறுபிறவியால் பின்பற்றப்படுவதில்லை.[12] பௌத்த மதத்தின் நிறுவனர், கௌதம புத்தர் இந்த இரண்டு நிலைகளையும் அடைந்ததாக நம்பப்படுகிறது. முதலில் போதி மரத்தின் கீழ் அவர் ஞானம் பெற்றபோது. இரண்டாவது பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தபோது. [12]பெரும்பாலான மகாயான பௌத்த அறிஞர்கள் பரந்த அளவில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால் இரண்டு நிலைகளுக்கும் "அடிப்படை" மற்றும் "அடிப்படையில்லாத நிர்வாணம்" என்ற சொற்களை விரும்புகிறார்கள்.
நிர்வாணம் அல்லது மறுபிறப்பின் சுழற்சிகளிலிருந்து விடுதலை என்பது தேரவாத பாரம்பரியத்தின் மிக உயர்ந்த நோக்கமாகும். மகாயான பாரம்பரியத்தில் மிக உயர்ந்த குறிக்கோள் புத்தம் (அறிவு) அடைதலே ஆகும். இதில் நிர்வாணத்தில் நிலைத்திருக்க முடியாது. புத்தர் புத்த வழியைக் கற்பிப்பதன் மூலம் மனிதர்களை துயரங்களிலிருந்து விடுவிக்க உதவுகிறார். புத்தருக்கோ அல்லது நிர்வாணம் அடைந்தவர்களுக்கோ மறுபிறப்பு இல்லை. ஆனால் அவரது போதனைகள் நிர்வாணத்தை அடைவதற்கான வழிகாட்டியாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உலகில் இருக்கும்.
பொருள் மற்றும் சொற்பிறப்பியல்
[தொகு]நிர்வாணம் என்ற சொல்லின் தோற்றம் அநேகமாக பௌத்தத்திற்கு முந்தையதாக இருக்கலாம்.[13][11] நிர்வாணம் தொடர்பாக சமணர்கள், ஆசீவகர்கள் மற்றும் சில இந்து மரபுகள் மத்தியில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மையக் கருத்தாக இருந்தது.
இது பொதுவாக துன்பம் மற்றும் மறுபிறப்பில் இருந்து விடுபடும் நிலையை விவரிக்கிறது.[13] வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தி ஆன்மீக விடுதலை பற்றிய கருத்துக்கள், இந்து சமயத்தின் பிரகதாரண்யக உபநிடதம் (வசனம் 4.4.6) போன்ற புத்தமத அல்லாத இந்திய மரபுகளின் பண்டைய நூல்களில் காணப்படுகின்றன.[14]
இந்தச் சொல்லானது பௌத்தத்தில் அதன் சொற்பொருள் வரம்பில் சிரமணர்களிடமிருந்து வந்திருக்கலாம்.[13] இருப்பினும் அதன் சொற்பிறப்பியல் அதன் பொருளுக்கு உறுதியானதாக இல்லை.[13] வெவ்வேறு பௌத்த மரபுகள் இந்த கருத்தை வெவ்வேறு வழிகளில் விளக்குகிறது.[13] மேலும் காலப்போக்கில் இந்த சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளது.[15]
குறிப்புகள்
[தொகு]- ↑ Bhikkhu, Thanissaro (2018-01-01). "No Self or Not-Self?". www.dhammatalks.org. Metta Forest Monastery. பார்க்கப்பட்ட நாள் 2020-02-11.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Collins 1998, ப. 191.
- ↑ 2.0 2.1 Buswell & Lopez 2013, ப. 589-590.
- ↑ 3.0 3.1 Keown 2004, ப. 194-195.
- ↑ Gombrich 2006, ப. 65.
- ↑ Gombrich 2006, ப. 66.
- ↑ 6.0 6.1 Buswell & Lopez 2013, Kindle loc. 44535.
- ↑ Collins 1990, ப. 82–84.
- ↑ Genjun Sasaki (1986). Linguistic Approach to Buddhist Thought. Motilal Banarsidass. pp. 124–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0038-0.
- ↑ Hamilton 2000, ப. 18–21.
- ↑ [a] Mun-Keat Choong (1999). The Notion of Emptiness in Early Buddhism. Motilal Banarsidass. pp. 1–4, 85–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1649-7.;
[b] Ray Billington (2002). Understanding Eastern Philosophy. Routledge. pp. 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-79348-8.;
[c] David Loy (2009). Awareness Bound and Unbound: Buddhist Essays. State University of New York Press. pp. 35–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-2680-8. - ↑ 11.0 11.1 Cousins 1998, ப. 9.
- ↑ 12.0 12.1 Buswell & Lopez 2013, ப. 590.
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 Buswell 2004, ப. 600.
- ↑ Max Müller (2011). Theosophy Or Psychological Religion. Cambridge University Press. pp. 307–310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-07326-4.
- ↑ "Nirvana". Chinese Buddhist Encyclopedia.